சென்னை,
பிரசாந்தா பானர்ஜி தலைமையிலான ஆல்-ஸ்டார் இந்திய கால்பந்து அணியுடன் காட்சி போட்டியில் விளையாட, 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணி சென்னை வந்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் காட்சி போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இந்த போட்டிக்கான ஆல்-ஸ்டார் இந்திய அணியில் சண்முகம் வெங்கடேஷ், சையத் ரஹிம் நபி, மெக்தாப் ஹூசைன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். பிரேசில் அணியில் ரொனால்டினோ, காபு, ரிவால்டோ, கில்பேர்டோ சில்வா உள்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். முன்னாள் கால்பந்து கதாநாயகர்களை காண ஆர்வம் அதிகமாக இருப்பதால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் பெருமளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.