IPL 2025, RR vs CSK: ஐபிஎல் 2025 தொடரின் 11வது லீக் போட்டி கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணி அதன் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு பதில் விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் மிரட்டலான தொடக்கத்தை அளித்தது.
இருப்பினும், ஜெய்ஸ்வால் 4 ரன்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடியாக விளையாட தொடங்கினார். கலீல் அகமது, அஸ்வின், ஜேமி ஓவர்டன் பந்துகளை சிதறடித்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். குறிப்பாக, பவர்பிளேவில் அஸ்வின் வீசிய 5வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியை அடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
இதனால் பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 79 ரன்களை அடித்திருந்தது. தொடர்ந்து, சாம்சன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரியான் பராக் ஒருமுனையில் நிற்க நிதிஷ் ராணா அதிரடியை தொடர்ந்தார். அவர் 36 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து துருவ் ஜூரேல் 3, ஹசரங்கா 4 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசியில் ஹெட்மயர் 19 ரன்களை அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 182 ரன்களை அடித்தது. கலீல் அகமது, நூர் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டை அடித்தனர்.
183 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு முதல் ஓவரிலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வேகத்தில் டக்அவுட்டானார். பவர்பிளேவிலும் சிஎஸ்கே அணி 1 விக்கெட்டை இழந்து 42 ரன்களை எடுத்தது. இந்த போட்டியிலும் மிடில் ஆர்டர் மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. திரிபாதி 23(19), தூபே 18(10), விஜய் சங்கர் 9(6) ரன்கள் என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.