லக்னோ,
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நேற்று தலைநகர் டெல்லிக்கு இண்டிகோ விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
உத்தரபிரதேசத்தின் லக்னோ வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த சதீஷ் சந்திர பர்மன் (வயது 63) என்ற பயணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் நடுவானில் விமானத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், உயிரிழந்த பயணியின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நடுவானில் விமானத்தில் பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.