சாபாலோ,
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2026-ம் ஆண்டு) நடைபெற உள்ளது.மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வு செய்யப்படும். இதர்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன.இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் 25-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா – பிரேசில் அணிகள் மோதின .இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டது. உலகக் கோப்பை தகுதி சுற்றில் பிரேசில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.
இதைத்தொடர்ந்து பிரேசில் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரை அந்த பதவியில் இருந்து நீக்கி அந்த நாட்டு கால்பந்து கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 62 வயதான டோரிவல் ஜூனியர் கடந்த 14 மாதங்களாக பயிற்சியாளராக இருந்து வந்தார். அவருக்கு பதிலாக மாற்று பயிற்சியாளரை தேடும் பணியை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தொடங்கி இருக்கிறது.