ராஜஸ்தானுடன் மோதும் சென்னை! அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. காரணம் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ராஜஸ்தான் அணி. கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இம்பேக்ட் ப்ளேயர் ஆக மட்டுமே விளையாடி வருகிறார்.

மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டனாக ரியான் பராக் தான் உள்ளார். மேலும் சில போட்டிகளிலும் அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் மோசமான பவுலிங் காரணமாக தோல்வி அடைந்தது ராஜஸ்தான். 20 ஓவரில் கிட்டத்தட்ட 286 ரன்கள் அடிக்க விட்டனர். சேஸிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரேல் சிறப்பாக விளையாடினாலும் 44 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 151 ரன்கள் மட்டுமே அடித்தது. குவின்டன் டி காக்கின் சிறப்பான ஆட்டத்தினால் கொல்கத்தா அணி எளிதான வெற்றியை பெற்றது.

One brings the magic
One brings the lightning
The combo we Yellove! #WhistlePodu #Yellove  pic.twitter.com/UNu9R1Oj1a

— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ்

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி சிறப்பாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார். அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை. 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்து வருவதால் இந்த போட்டி விறுவிறுப்பாக மாறி உள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் தான் காரணமாக அமைந்தது.  இதனால் ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா மற்றும் சாம் கரண் ஆகியோருக்கு பதிலாக வேறு சில வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த மாற்றங்களை செய்தால் சென்னை அணி இன்றைய போட்டியில் எளிதாக வெற்றி பெறலாம்.

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.