வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம். விருத்தாசலம் தல சிறப்பு : விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது. பொது தகவல் : கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், ஆதி அய்யனார், கருப்பசாமி, சுந்தரமூர்த்தி அய்யனார், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன. தல வரலாறு : சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்து திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வழியாக திருநாவலூர் சென்றார். அப்போது விருத்தகிரீஸ்வரர் அவரை அழைத்து, தன்னை பற்றி பாடல் பாடுமாறு கூறினார். அதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் […]
