ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : போட்டிக்குப் பிறகு நடந்தது இதுதான்..!

Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்டியா – சாய் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டது. பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த பாண்டியாவை வேண்டுமென்றே சாய் கிஷோர் தான் வம்புக்கு இழுத்தார். ஆனால் போட்டிக்குப் பிறகு இருவரும் வேறுமாதிரி சீன் போட்டனர்.

மும்பை vs குஜராத் மோதல்

ஐபிஎல் 2025 தொடரின் 9வது போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 196 ரன்கள் குவிக்க, அடுத்து சேஸிங் ஆடிய மும்பை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. குஜராத் அணியில் சாய் சுதர்சன், பட்லர், சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாட, பந்துவீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 80வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல்

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினாலும் மற்ற பிளேயர்கள் யாரும் பெரிதாக அதிரடி பேட்டிங் ஆடவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பார்த்தபடி பேட்டில் பந்து படவே இல்லை. இதனை தெரிந்து கொண்ட குஜராத் அணியின் சாய் கிஷோர் 15வது ஓவரை வீசிக் கொண்டிருக்கும்போது ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே முறைத்து வம்புக்கு இழுத்தார். பாண்டியா தலை குணிந்து அமைதியாக இருந்தாலும் சாய் கிஷோர் மீண்டும் முறைத்துக் கொண்டே இருந்தார். இப்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

போட்டிக்குப் பிறகு நடந்தது என்ன?

ஆனால் போட்டிக்குப் பிறகு இருவரும் சகஜமாக கட்டித் தழுவி சிரித்துக் கொண்டனர். இது குறித்து பேட்டியளித்த சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அதனால் இதனையெல்லாம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டோம். களத்தில் எதிரெதிர் துருவங்களாகவே இருப்போம் என கூலாக கூறினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா இருந்தபோதுதான் சாய் கிஷோருக்கு அந்த அணியில் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.