DC vs SRH: ஹைதராபாத்தை துவம்சம் செய்த ஸ்டார்க், குல்தீப்.. டெல்லி அணிக்கு தொடர் வெற்றி

ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டி இன்று (மார்ச் 30) விசாகப்பட்டினம், டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற ஹைதரபாத்  அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவும் களம் இறங்கினார். வழக்கமாக தொடக்கத்தில் ரன்களை குவிக்கும் இந்த ஜோடி இந்த ஐபிஎல்லில் இதுவரை பெரிதாக ஜொலிக்க வில்லை. முதலில் 1 ரன்கள் மட்டுமே எடுத்த அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

அதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் 2, நிதிஷ் ரெட்டி 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறுது நேரம் களத்தில் நின்ற ஹெட்டும் 22 ரன்கள் எடுத்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்கிற்கு இது 3வது விக்கெட். பொதுவாக பெரிய ஸ்கோர்களை அடிக்கும் ஹைதராபாத் அணி இம்முறை தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 

மேலும் படிங்க: ஐபிஎல் கோப்பை இந்த முறை ஆர்சிபி அணிக்கு தான் – தினேஷ் கார்த்திக் சொன்ன முக்கிய பாயிண்ட்

இந்த நிலையில், அணியின் இளம் வீரரான அனிகிட் வர்மா, ஹென்ரிச் கிளாசென்னுடன் கைகோர்த்தார். அணியின் மானத்தை ஓரளவுக்கு காப்பாற்றியவரும் அவரே.. டெல்லி அணியின் பந்து வீச்சுக்கு மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையில், அனிகிட் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினார். தனது ஐபிஎல் முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அனிகிட் வர்மா 74 ரன்களும் கிளாசென் 32 ரன்களும் அடித்தனர். டெல்லி அணியின் சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களையும் குல்தீப் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். 

இதனைத் தொடர்ந்து டெல்லி அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. எதிர்பார்த்தப்படி அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க். ஹைதராபாத் அணி டெல்லி அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த 81 ரன்கள் சேர்க்கும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. ஃபாஃப் டு பிளெசிஸ் 50 ரன்களில் வெளியேறினார். 

அதனைத் தொடர்ந்து டெல்லி அணியில் அடுத்தடுத்த் களம் இறங்கிய வீரர்கள் ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். 16 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஹைதராபாத் அணி சார்பில் அறிமுக வீரர் ஜீஷான் அன்சாரி மட்டுமே 3 விக்கெட்களை வீழ்த்தினார். டெல்லி அணி அபாரமாக விளையாடி 2வது வெற்றிய பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த அணி தற்போது 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  

மேலும் படிங்க: மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஹர்திக் பாண்டியா! தடை விதிக்கப்படுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.