கிரிக்கெட்டை பொறுத்தவரை தற்போது இந்திய அணிதான் டாப் அணியாக உள்ளது. அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை கூறலாம். இந்த இரு அணிகள் மோதும் போட்டிகள் என்றால் சுவாரஸ்யம் அதிகமாகதான் இருக்கும். இச்சுழலில் இரு அணிகளும் சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் மோதிக்கொண்டன. அந்த தொடரில் இந்தியா மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அத்தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளும் மீண்டும் வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடரில் மோத இருக்கின்றன. இது தொடர்பான ஆட்டவணை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
மேலும் படிங்க: சிஎஸ்கே போட்டியை பார்க்க வருபவர்கள் உண்மையில் ரசிகர்களா? – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கேள்வி!
11 cities. 26 matches. Three visiting nations up for the challenge.
Cricket is everywhere this summer. And you need to see it! pic.twitter.com/FZOm1PGj0X
— Cricket Australia (@CricketAus) March 30, 2025
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்
1) முதல் டி20 போட்டி – அக்டோபர் 29ஆம் தேதி – மனுகா ஓவல், கான்பெர்ரா (இரவு போட்டி)
2) இரண்டாவது டி20 போட்டி – அக்டோபர் 31ஆம் தேதி – மெல்போர்ன் மைதானம் (MCG) (இரவு போட்டி)
3) மூன்றாவது டி20 போட்டி – நவம்பர் 2ஆம் தேதி – பெல்லரைவ் ஓவல், ஹோபர்ட் ( இரவு போட்டி)
4) நான்காவது டி20 போட்டி – நவம்பர் 6ஆம் தேதி – கோல்டு கோஸ்ட் மைதானம் (இரவு போட்டி)
5) ஐந்தாவது டி20 போட்டி – நவம்பர் 8ஆம் தேதி – காபா, பிரிஸ்பேன் (இரவு போட்டி)
இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர்
1) முதல் ஒருநாள் போட்டி – அக்டோபர் 19ஆம் தேதி – பெர்த் மைதானம் – (பகல்/இரவு போட்டி)
2) இரண்டாவது ஒருநாள் போட்டி – அக்டோபர் 23ஆம் தேதி -ம் அடிலெய்டு மைதானம் – (பகல்/இரவு போட்டி)
3) மூன்றாவது ஒருநாள் போட்டி – அக்டோபர் 25ஆம் தேதி – சிட்னி மைதானம் (SCG) (பகல்/இரவு போட்டி)
மேலும் படிங்க: DC vs SRH: ஹைதராபாத்தை துவம்சம் செய்த ஸ்டார்க், குல்தீப்.. டெல்லி அணிக்கு தொடர் வெற்றி