‘டாஸ் முடிவு’
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அசாமின் கவுஹாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.
‘அந்த 2 வீரர்கள்!’
டாஸை வென்றுவிட்டு ருத்துராஜ் பேசுகையில்,
‘இது ஒரு நல்ல பிட்சாகத் தெரிகிறது. அதனால் சேஸ் செய்கிறோம். கடந்த போட்டிக்கும் இந்தப் போட்டிக்கும் குறுகிய இடைவெளிதான் இருந்தது. ஆனால், ஐ.பி.எல் அப்படித்தான் இருக்கும். ஒரு போட்டியிலிருந்து அடுத்த போட்டிக்கு சீக்கிரமே மீண்டு வர வேண்டும். நாங்கள் முதல் முதலாக இந்த மைதானத்துக்கு ஆட வந்திருக்கிறோம்.

ஹோட்டலிலிருந்து மைதானம் வரைக்கும் இந்த ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. சாம் கரணுக்கு பதில் ஜேமி ஓவர்ட்டனும் தீபக் ஹூடாவுக்கு பதில் விஜய் சங்கரும் லெவனுக்குள் வந்திருக்கிறார்கள்.’ என்றார்.
சென்னை அணி கடந்த போட்டியில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.