Vijay Sethupathi: `போக்கிரி' பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி – அசத்தும் லைன் அப்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘மெரி கிறிஸ்துமஸ்’, ‘மஹாராஜா’, ‘விடுதலை பாகம் -2’ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி தூள் கிளப்பியிருந்தார்.

கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது படக்குழு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

Vijay Sethupathi in Puri Jaganadh Direction
Vijay Sethupathi in Puri Jaganadh Direction

இப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்டில் நிறுவனத்தில் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் இப்படத்தை தயாரிக்கிறார். இது குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் ,”யுகாதி பண்டிகையன்று சென்சேஷனல் கூட்டணியின் புதிய சாப்டர் தொடங்கியிருக்கிறது.” எனப் படக்குழு பதிவிட்டிருக்கிறது.

இத்திரைப்படம் பான் இந்தியன் திரைப்படமாக அத்தனை மொழிகளிலும் உருவாகி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என அறிவித்திருக்கிறார்கள்.

இதுதவிர ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ̀ஏஸ்’ திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ̀TRAIN’ படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

‘ஏஸ்' படத்தில்...
‘ஏஸ்’ படத்தில்…

இதில் ஷ்ருதி ஹாசன், நாசர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்திருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த லைப் அப்பை தாண்டி ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடித்துவருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.