CSK Playing XI Changes: சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. சொந்த மண்ணில் மும்பை அணிக்கு எதிராக வென்றிருந்தாலும் அடுத்த ஆர்சிபியிடம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், தற்போது கௌகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் கடைசிவரை போராடி தோற்றது.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் அடுத்த 3 போட்டிகள்
அடுத்து, ஏப். 5ஆம் தேதி டெல்லி அணியையும், ஏப். 8ஆம் தேதி பஞ்சாப் அணியையும், ஏப். 11ஆம் தேதி கொல்கத்தா அணியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாப் அணியை முல்லான்பூரிலும், மற்ற 2 போட்டிகளை சென்னையிலும் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. அதாவது, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா என பலம் வாய்ந்த அணிகளுடன் சிஎஸ்கே மோத இருப்பதால் இந்த 3 போட்டிகளும் தற்சமயத்தில் மிக முக்கியமான போட்டியாகும். இந்த 3இல் குறைந்தபட்சம் 2 போட்டிகளையாவது சிஎஸ்கே அணி வென்றால் மட்டுமே தொடரில் மீண்டு வர இயலும்.
Chennai Super Kings: பவர்பிளே பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும்
சிஎஸ்கே அணி மீண்டு வர வேண்டும் என்றால் பவர்பிளே பேட்டிங்கிற்கும், பவர்பிளே பௌலிங்கிற்கும் முறையே சிறப்பான பேட்டர் மற்றும் பௌலர் தேவை எனலாம். பவர்பிளேவில் அதிக ரன்களை அடிக்க டெவான் கான்வேவை அணிக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையெனில், ரச்சின் ரவீந்திரா உடன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வேண்டும். நம்பர் 3இல் வேண்டுமானால் திரிபாதியை விளையாட வைக்கலாம். இது அவர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை தரலாம்.
Chennai Super Kings: அஸ்வினுக்கு பதில் அன்ஷூல் கம்போஜ்
அதேபோல், பவர்பிளேவில் சிறப்பான பந்துவீச்சாளராக கலீல் அகமது இருந்தாலும் அவருக்கு துணையாக இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் நிச்சயம் தேவை. சாம் கரன் மற்றும் ஓவர்டன் ஆகியோர் புதிய பந்தில் அந்தளவிற்கு சிறப்பாக பந்துவீச மாட்டார்கள் எனலாம். எனவே, அன்ஷூல் கம்போஜை சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர வேண்டும், அஸ்வினுக்கு பதிலாக…
Chennai Super Kings: ஏன் அஸ்வின் தேவையில்லை…?
ஆம், அஸ்வின்தான் தற்போதைய பிளேயிங் லெவனில் ஒரு வீக்-லிங்க் எனலாம். சுழற்பந்துவீச்சில் ஜடேஜா, நூர் அகமது இருக்கிறார்கள். 3வது சுழற்பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் ரச்சின் ரவீந்திராவை 2 ஓவர்களை வீச வைக்கலாம். அஸ்வினுக்கு பதில் அன்ஷூல் கம்போஜ் இருப்பதால் ஒரு பேட்டர் குறைவாரே என நீங்கள் சொல்வது எனக்கும் கேட்கிறது. ஆனால், அஸ்வின் நம்பர் 8, நம்பர் 9 இடத்தில் இறங்கி அடிக்கும் அந்த ரன்கள் அவ்வளவாக தேவையில்லை.
Chennai Super Kings: ஏன் அன்ஷூல் கம்போஜ் தேவை…?
அதற்கு பதில் அன்ஷூல் போன்ற புதிய பந்தில் அற்புதமாக வீசும் நபர்களை கொண்டுவந்தால் கலீல் அகமதுடன் சிறப்பான கூட்டணியை அவர்களால் அமைக்க முடியும். பவர்பிளேவில் விக்கெட்டுகளையும் 2-3 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். குறைந்தபட்சம் சேப்பாக்கம் இல்லாமல் வெளியே விளையாட வேண்டிய போட்டிகளிலாவது அஸ்வினுக்கு பதில் அன்ஷூல் கம்போஜை விளையாட வைக்கலாம்.
பேட்டிங்கில் சிஎஸ்கே பவர்பிளேவில் ரன் அடிப்பது எந்தளவிற்கு முக்கியமோ, பவர்பிளேவில் 2-3 விக்கெட்டுகளை எடுப்பதும் முக்கியமாகும். தற்போதைய சிஎஸ்கே அணியை பலமாக்க வேண்டுமானால் பிளேயிங் லெவனில் அஸ்வின் தேவையில்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.