சென்னை நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமான ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இதை ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குரான் இந்த மாதத்தில்தான், அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை […]
