Rajasthan Royals vs Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. சென்னை அணி கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்தது, மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டன் ரியான் பராக் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து இருந்தது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார். கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக விளையாடாத தீபக் ஹூடா மற்றும் சாம் கரன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஓவர்டன் மற்றும் விஜய் சங்கர் அணியில் இடம் பெற்றனர்.
மேலும் படிங்க: DC vs SRH: ஹைதராபாத்தை துவம்சம் செய்த ஸ்டார்க், குல்தீப்.. டெல்லி அணிக்கு தொடர் வெற்றி
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன் பிறகு களம் இறங்கிய நித்திஷ் ரானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். கிட்டத்தட்ட 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் உட்பட 81 ரன்கள் அடித்தார். இது போட்டியை அப்படியே மாற்றியது. மறுபிறம் சஞ்சு சாம்சன் 20 ரன்கள், ரியான் பராக் 37 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 220 செல்லும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி ஐந்து ஓவரை சென்னை அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை அணியின் தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் பத்திரனா தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
சென்னை அணி சேசிங்
இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து சென்னை அணிக்கு டாப் ஆர்டர் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதும் இல்லாமல் அவுட் ஆனார். பொறுமையாக விளையாடிய ராகுல் திருப்பதியும் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 63 ரன்கள் அடித்து முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே அசரங்காவின் பதில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி கூட்டணி வெற்றிக்காக போராடியது. ஆனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
தோல்வி குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட்
“பவர் பிளேயில் இரண்டு அணிகளின் ஆட்டமும் மாறியது. நிதிஷ் நன்றாக பேட்டிங் செய்தார், பீல்டிங்கிலும் 8-10 ரன்களை தவற விட்டோம். 180 ரன்களை எளிதாக அடிக்க முடியும். முதல் இன்னிங்ஸ் பிரேக்கில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் 210 ரன்கள் அடித்திருக்க முடியும், ஆனால் 180 ரன்களுக்குள் சுருக்கி விட்டோம். நான் தற்போது 3வது இடத்தில் பேட்டிங் செய்கிறேன், பல ஆண்டுகளாக அஜிங்க்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்தார், ராயுடு மிடில் ஓவர்களை கவனித்துக்கொண்டார். நான் மிடில் ஓவர்களை கவனித்துக்கொள்ள சற்று தாமதமாக வந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். திரிபாதி ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் நான் மூன்று ஆட்டங்களிலும் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய வருகிறேன்.
ஏலம் முடிந்த பிறகு பேட்டிங் ஆர்டர் முடிவு செய்யப்பட்டது, அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவைப்படும்போது ரிஸ்க் எடுத்து ஸ்ட்ரைக் சுழற்ற முடியும். துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கவில்லை, ஆனால் அது கிடைத்தவுடன் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும். வழக்கம் போல் நூர் நன்றாக பந்து வீசுகிறார், கலீல் நன்றாக பந்து வீசுகிறார், ஜடேஜா நன்றாக பந்து வீசுகிறார். பந்துவீச்சுத் துறையில் உங்களுக்கு கொஞ்சம் உத்வேகம் தேவை. எல்லாம் ஒன்றாக வந்து, உத்வேகம் கிடைத்தவுடன், நாங்கள் ஒரு நல்ல அணியாக இருப்போம் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: சிஎஸ்கே போட்டியை பார்க்க வருபவர்கள் உண்மையில் ரசிகர்களா? – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கேள்வி!