சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இன்னும் சித்திரை மாதம் தொடங்காத நிலையிலேயே அனல்காற்றுடன் கடும் வெயியில் கொளுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டி தாண்டி பதிவாகிறது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மற்றொரு புறம் கோடை வெயிலை சமாளிக்க தர்பூசணி […]
