MI vs KKR: ஐபிஎல் 2025 தொடரில் இன்று 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி பல மாற்றங்களை செய்தது.
ராபின் மின்ஸ், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜூ ஆகியோருக்கு பதில் வில் ஜாக்ஸ், விக்னேஷ் புத்தூர், அஷ்வனி குமார் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி களமிறக்கியது. இதில் அஷ்வனி குமாருக்கு இதுவே ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாகும். கொல்கத்தா அணியில் மொயீன் அலிக்கு பதில் சுனில் நரைன் அணிக்குள் வந்தார்.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இது மும்பை அணிக்கு பெரிய சாதகமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே போல்ட் சுனில் நரைனை டக்-அவுட்டாக்கினார். தீபக் சஹார் வீசிய 2வது ஓவரில் டி காக் 1 ரன்னில் வெளியேறினார். 4வது ஓவரை வீசிய அஷ்வனி குமார், ரஹானேவை 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் தீபக் சஹார், வெங்கடேஷ் ஐயரை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் பவர்பிளே முடிவில் கேகேஆர் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பவர்பிளே முடிந்தும் விக்கெட் வேட்டையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தனர். ஹர்திக் பாண்டியா ரகுவன்ஷியை 26 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ரின்கு சிங் – மனீஷ் பாண்டே ஜோடி 29 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அஷ்வனி குமார் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணியின் மிடில் ஆர்டரை சரித்தார்.
ரின்கு சிங் 17, மனீஷ் பாண்டே 19, ஆன்ட்ரே ரஸ்ஸல் 5 ரன்களில் அஷ்வனி குமாரிடம் வீழ்ந்தனர். விக்னேஷ் புத்தூர் ஹர்ஷித் ராணாவை 4 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ய, கடைசியாக நம்பிக்கை அளித்து வந்த ரமன்தீப் சிங் சான்ட்னரிடம் வீழ்ந்தார். ரமன்தீப் 12 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 22 ரன்களை அடித்திருந்தார். கேகேஆர் அணி 16.2 ஓவர்களிலேயே 116 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. அஷ்வனி குமார் 4, தீபக் சஹார் 2, போல்ட், ஹர்திக் பாண்டி, விக்னேஷ் புத்தூர், மைக்கெல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
Match 12. Mumbai Indians Won by 8 Wicket(s) https://t.co/iEwchzEpDk #MIvKKR #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) March 31, 2025