மார்ச் 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 அளவிலான நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியதோடு மொட்டை மாடிகளில் இருந்த இன்பினிட்டி நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீர் அருவி போல் சாலைகளில் கொட்டியது. தவிர, நகரின் முக்கிய சதுச்சக் மார்க்கெட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 30 மாடி அடுக்குமாடி கட்டிடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்த கட்டிடத்தில் 100 […]
