பாண்டிங் vs பண்ட்… குரு – சிஷ்யன் மோதலில் வெல்லப்போவது யாரு…?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை தொடரின் 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

லக்னோ அணி தொடரின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் அனைவரின் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைத்தனர். அவர்கள் தங்களது வெற்றிப்பாதையை தொடரை நாளை களத்திற்கு வருகின்றனர். அதே சமயம் பஞ்சாப் அணி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் லக்னோ அணியை சந்திக்க உள்ளது. அவர்கள் தங்களது வெற்றியை தொடர நினைப்பதுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற நினைப்பார்கள். 

இரு அணிகளின் பலம் மற்றும் பலவீணம் 

லக்னோ அணி: லக்னோ அணியை பொறுத்தவரையில் பேட்டிங் நல்ல பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஒன் டவுனில் இறங்கும் நிகோலஸ் பூரான் கடந்த இரு போட்டிகளில் நல்ல ரன்களை ஸ்கோர் செய்து உள்ளனர். அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இன்னும் ஃபார்மிற்கு திரும்பவில்லை. அவர் முதல் போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது மோசமான ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர் இப்போட்டியில் ஃபார்மிற்கு திரும்பினால் அந்த அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலம் கிடைக்கும். பினிஷிங்கில் டேவிட் மில்லர் பலமாக பார்க்கப்படுகிறார். 

மேலும் படிங்க: MI vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த அறிமுக வீரர்.. யார் இந்த அஷ்வானி குமார்?

 

அதேசமயம் பந்து வீச்சை எடுத்துக்கொண்டால், ஷர்துல் தாக்கூர் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவருக்கு துணையாக பிரின்ஸ் யாதவ் உள்ளார். சுழற்பந்து வீச்சில் தீக்னேஷ் மற்றும் பிஸ்னோய் உள்ளனர். இந்த அணியில் பலவீணமாக பார்க்கப்படுவது என்னவென்றால், பந்து வீச்சில் விக்கெட்டை எடுத்தால் தப்பித்தார். அதே நேரத்தில் விக்கெட்டை எடுக்கவில்லை என்றால், எதிரணி பேட்ஸ்மேன்களிடம் நன்றாக மாட்டிக்கொள்வார்கள். அவர்களின் நம்பிக்கையான் பந்து வீச்சாளர் என்று இல்லை. பலர் காயத்தால் அவதிபட்டு வருகின்றனர். 

பஞ்சாப் அணி:  பஞ்சாப்பை பொறுத்தவரையில் பேட்டிங் பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் தொடக்க வீரராக வந்த ஆர்யா சிறப்பாக விளையாடினார். அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் கடந்த போட்டியில் 97 ரன்கள் எடுத்தார். பினிஷிங் இடத்தில் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோனிஸ் உள்ளனர். இது பலமாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அர்ஷதீப் சிங், மார்கோ யான்சன் மற்றும் சாஹல் பலமாக உள்ளனர். குறப்பாக கடந்த போட்டியில் விஜயகுமார் வய்சாக் சிறப்பாக பந்து வீசினார். 

நேருக்கு நேர் 

இதுவரை இந்த இரு அணிகள் 4 முறை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லக்னோ அணி 3 முறையும் பஞ்சாப் அணி 1 முறையும் வென்றுள்ளது. குறிப்பாக கடந்த அணி லக்னோ தனது ஹோம் கிரவுண்டில் முதல் முறையாக பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மைதானம், நேரம் மற்றும் ஸ்டிரிமிங் 

மைதானம்: பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ. 

நேரம்: இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். 

ஸ்டிரிமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹார்ஸ்டாரில் காணலாம். 

இரு அணிகளுக்கான உத்தேச பிளேயிங் 11

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ் (இம்பேக்ட் வீரர்), ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(கேப்டன் & விகீ), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ். 

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங் (விகீ), பிரியான்ஷ் ஆர்யா (இம்பேக்ட் வீரர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், லாக்கி பெர்குசன் / அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். 

மேலும் படிங்க: தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.