சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில் வாகனங்கள் நிறுத்த முதல் ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களுக்கும் தலா 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். […]
