பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகள் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்திற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் […]
