நேற்றைய தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ ஆகியோரும் பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

சென்னையில் நடந்த இந்த கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இந்தப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கால்பந்து போட்டியைக் காண அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது மகன் ஆதிக்குடன் அரங்கத்திற்கு வந்திருந்தார்.
போட்டி முடிந்தப் பிறகுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சில பதில்களைக் கொடுத்த ஷாலினி, “போட்டி அற்புதமாக இருந்தது. சிறந்த அனுபவமாகவும் அமைந்திருந்தது. ஆதிக்கும் இந்தப் போட்டியை என்ஜாய் பண்ணியிருப்பார் என நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார்.
அஜித்தின் மகன் ஆதிக்கும் கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் மூன்றாம் இடத்தைப் பிடித்தப் பிறகு பேட்டிக் கொடுத்திருந்த நடிகர் அஜித்தும், “நான் என்னுடைய குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்வேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
⚽ Aadvik shares a memorable moment with football icon Ronaldinho. #Aadvik #Ronaldinho pic.twitter.com/QIz4Q3jYV0
— Suresh Chandra (@SureshChandraa) March 30, 2025
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த போட்டியை கண்டுகளித்த ஆதிக் பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோவுடன் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ரொனாடில்னோவுடன் ஆதிக் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காணொளியை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
