MI vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த அறிமுக வீரர்.. யார் இந்த அஷ்வானி குமார்?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 31) 12வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. 

இதில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மும்பை அணி பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தினர். அதன் விளைவாக கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. நைரன் டக் அவுட் ஆக, டி காக் 1, ரஹானே 11, வெங்கடேஷ் ஐயர் 3, ரகுவன்சி 26 என வரிசையாக பெவிலியனுக்கு நடையை கட்டினர். 

மேலும் படிங்க: தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!

 

இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அஷ்வானி குமார் 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதில் மனிஷ் பாண்டே மற்றும் ரசலை போல்ட் ஆகினார். மற்ற வீரர்களான ரஹானே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அஷ்வானி குமார் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். ஐபிஎல்லின் அறிமுக போட்டியிலேயே அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியதை அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதிலும் குறிப்பாக அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது அவரது ஐபிஎல் கெரியரில் மறக்க முடியாத தருணமாக மாறியது. 

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றி அஷ்வானி குமார், முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த 10வது வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வீரராகவும் மாறி உள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸுக்கு 2019ஆம் ஆண்டில் அறிமுகமான அல்சாரி ஜோசப் இந்த சாதனையை செய்த முதல் வீரர் ஆவார். 

யார் இந்த அஷ்வானி குமார்? 

மொஹாலியின் ஜான்ஜேரியில் பிறந்தவர் அஷ்வானி குமார். கடந்த ஆண்டு ஷெர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் தனது அபார பந்து வீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இடது கை பந்து வீச்சாளரான அஷ்வானி குமார், கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் சீனியர் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார். அதில் நான்கு ஆட்டங்களில் மட்டுமே விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 8.50 என்ற எகானமியைப் பதிவு செய்தார். பஞ்சாப் அணிக்காக இரண்டு முதல் தர மற்றும் நான்கு லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த நிலையில், இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 30 லட்சத்திற்கு மெகா ஏலத்தில் வாங்கியது. தற்போது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார். 

மேலும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாட்டின் சுயநலத்தால் தோற்கும் சிஎஸ்கே?? – இந்த வருஷம் கப் கிடையாது…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.