ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில், 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத ஆர்.சி.பி அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என புதிய கேப்டனுடன் களமிறங்கியிருக்கிறது.
பிலிப் சால்ட் அவுட்டானா கோலி, கோலி அவுட்டானா, படிக்கல், படிக்கல் அவுட்டானா பட்டிதார், பட்டிதார் அவுட்டானா லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன் அவுட்டானா ஜிதேஷ் சர்மா, ஜிதேஷ் சர்மா அவுட்டானா டிம் டேவிட் என பேட்டிங் யூனிட் மற்றும் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயாள், க்ருனால் பாண்டியா, சுயாஷ் சர்மா என பவுலிங் யூனிட் என்று வலுவான அணியாக ஆர்.சி.பி இருக்கிறது.

இன்னும், சில பிளேயர்கள் பிளெயிங் லெவனில் இறக்கப்படாமலும் இருக்கின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, தனது இரண்டாவது போட்டியில் சென்னை அணியை அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு வென்று மோசனமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், சி.எஸ்.கே வசம் இருந்த மற்றொரு சாதனையையும் ஆர்.சி.பி தனதாக்கியிருக்கிறது. இதுவரையில், இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் கொண்ட அணியாக 17.7 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் சி.எஸ்.கே முதலிடத்தில் இருந்தது.
இப்போது ஆர்.சி.பி இன்ஸ்டாகிராமில் 17.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்று, சி.எஸ்.கே-வை ஓரங்கட்டி முதலிடம் பிடித்திருக்கிறது. மூன்றாவது இடத்தில், 16.2 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் மும்பை அணி இருக்கிறது.
Officially the biggest brand in the IPL. #RCB pic.twitter.com/csBs518JoV
— RCBXTRA (@RCBXTRAOFFICIAL) March 31, 2025
17 சீசன்களாக கோப்பையை வெல்லவில்லை என்ற மோசமான சாதனைக்கு, இந்த சீசனில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தனது ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்துவரும் ஆர்.சி.பி, கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.