நரேந்திர மோடி பிரதமரானப் பிறகு முதல் முறையாக நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் மையத்துக்குச் சென்றிருந்தார். இங்கு மாதவ் நேத்ராலயா ப்ரிமீயம் மையம் என்கிற கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியப் பின் மோடி உரையாற்றியிருக்கிறார்.
இங்கு, பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்தியாவின் கலாசார ஆலமரம் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இங்கு பேசிய பிரதமர் மோடி, “ இந்தியாவிற்கு நாம் அடித்தளம் போடுவதாகவும் அது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு வலுவாக திகழும் என்பதை நான் அயோத்தில் கூறியிருந்தேன். நம் முன்னோர்களான ஹெட்கேவார் மற்றும் கோல்வால்கர் குருஜியின் வழிகாட்டுதல்களுடன் நாம் விக்சித் பாரத் திட்டத்தை சாதித்துக் காட்டுவோம்.
நம் தலைமுறையினரின் தியாகங்களை நாம் வீணடிக்கமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவில் சுந்ததிரப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது.
இப்போது 100 வருடங்களைக் கடந்தப் பிறகு முக்கியமான தருணத்தில் நாம் நிற்கிறோம். அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் பெரிய லட்சியங்களை நாம் எட்ட வேண்டியது இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் விதை 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்டது. அது இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
கோடிக்கணக்கான சுயம்சேவகர்கள் கிளைகளாக படர்ந்து நிற்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் அழியாத கலாசரத்தின் ஆலமரமாகவும் விளங்குகிறது.

இது ஒரு அமைப்பு மட்டுமல்ல, தேசிய உணர்வுகளின் சக்தியாகவும் விளங்குகிறது. இந்தியாவின் பண்பாட்டு உணர்வுகள் ஒருபோதும் தளரவில்லை. அந்த உணர்வுகளை உயிர்ப்புடன் வைப்பதில் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.” எனப் பேசியிருக்கிறார்.
மேலும், வான்வாசி கல்யாண், ஏகல் வித்யாலயா, சேவ பாரதி போன்ற ஆர்.எஸ்.எஸின் சேவைகளை பாராட்டி பேசியிருந்தார் மோடி.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
