டிரம்பின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும்: வெள்ளை மாளிகை – அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும்…?

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் அரசு நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருமாற்றுவேன் என்று கூறினார். அமெரிக்காவில் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் … Read more

மூன்று கார்களில் டார்க் எடிசனை வெளியிடும் சிட்ரோன்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள நிலையில், சிட்ரோன் நிறுவனமும் தனது C3, ஏர்கிராஸ் மற்றும் பாசால்ட் கூபே என மூன்று மாடல்களிலும் டார்க் எடிசன் என்ற பெயரில் கருமை நிறத்தை பெற்ற மாடல்களை விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது. நிறத்தை தவிர பெரிதாக எந்த தொழில்நுட்பத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாடல்களின் எஞ்சின் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் இருக்காது. இந்த கார்களில் C3, ஏர்கிராஸ் … Read more

எம்புரான்: “முல்லைப் பெரியாறு குறித்த பொய் காட்சிகளை நீக்குக" – கம்பத்தில் விவசாயிகள் போராட்டம்

அண்மையில் நடிகர் மோகன்லால் நடிப்பில், இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது. இத் திரைப்படத்தில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அணைக்கு எதிரான காட்சிகளை நீக்காவிடில், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனர் கோபாலனை கண்டித்து அந்த நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். முல்லைப்பெரியாறு அணை – எம்புரான் அதன்படி இன்று காலை கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் … Read more

கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார். கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் … Read more

''மத அடிப்படையில் தாக்கல் செய்யவில்லை'' – வக்பு திருத்த மசோதா குறித்து கிரண் ரிஜிஜு பேச்சு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் இன்று பகல் 12 மணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர் கிரண் ரிஜிஜுவை வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்யுமாறு அழைத்தார். மசோதா தாக்கல் செய்தவற்கு காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் முதல் ஆட்சேபத்தை பதிவு செய்தார். அப்போது, “எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல், இரண்டு தரப்பிடமிருந்தும் … Read more

ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதன்முறையாக நடந்த அதிசயம்..!

IPL Points Table Latest News : ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக தொடங்கி நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி ஆர்சிபி அணியின் கோட்டையாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி சரியாக துவங்கும். இந்த சூழலில் இப்போது இருக்கும் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்ன … Read more

Vadachennai 2: தனுஷ் ரோலில் மணிகண்டனா? வடசென்னை – 2 அப்டேட் என்ன?

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனப் பலரும் நடித்து பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்திய படம் ‘வடசென்னை’. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி பலவித பேச்சுவார்த்தைகள் நடந்தன. உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தன. அடுத்த படமாக ‘வடசென்னை 2’ படத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள் எனும்போது எல்லோரும் அதை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது தனுஷ் வெற்றிமாறன் இரண்டு பேருமே தனித்தனியே வேறு படம் தொடங்கியிருக்கிறார்கள். Vetrimaaran, dhanush இப்போதுதான் ‘வடசென்னை 2’ … Read more

சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி:  மத்தியஅரசு வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது,  சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல் என  வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால்  கூறினார். மக்களவையில்  இன்று வக்பு சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அதன்மீதான விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.  கே.சி.வேணுகோபால், “நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் குறித்து குறைந்தபட்சம் திருத்தங்கள் கூறுவதற்கு … Read more

நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல்

புதுடெல்லி, வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் … Read more

ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி… லக்னோ கேப்டன் பண்ட் கூறியது என்ன..?

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more