உக்ரைனுடன் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தில் ‘போரின் மூல காரணத்தை தீர்க்க’ எந்த ஒரு குறிப்பும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்துள்ள ரஷ்யா புதிய கோரிக்கைகளை வெளியிட்டு டிரம்பை உசுப்பேற்றியுள்ளது. அமெரிக்க திட்டங்களை ரஷ்யா “மிகவும் தீவிரமாக” பரிசீலித்தாலும், பரிந்துரைக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் விதிமுறைகளில் கிரெம்ளின் அதிருப்தி அடைந்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறினார். விளாடிமிர் புடினின் முக்கியக் கோரிக்கையான “மோதலின் மூல காரணங்களில்” […]
