சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி […]
