குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குஜராத்தின் பனஸ்கந்தாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து பனஸ்கந்தா கலெக்டர் மிஹிர் படேல் கூறுகையில், “காலை 9.45 மணியளவில் தொழிற்சாலையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது, இதனால் தொழிற்சாலையின் கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.” இதில், தொழிற்சாலையில் இருந்து […]
