சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.! – Bajaj Pulsar Range 2 crore sales milestone

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 2 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் ரூ.1,184 முதல் ரூ.7,379 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு சந்தையில் நுழைந்த பல்சர் பைக் தற்பொழுது பல்சர் கிளாசிக், என் சீரிஸ், என்எஸ் சீரிஸ், ஆர்எஸ்200 மற்றும் 220F என விரிவடைந்து மொத்தமாக 12 மாடல்கள் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் பல்சர் என்ற பெயரிலும் சில நாடுகளில் டோமினார் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

குறிப்பாக பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும் ஐம்பது நாடுகளில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்சர் சந்தையில் முன்னணி மாடலாக விளங்குவதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. முதல் 1 கோடி இலக்கை எட்ட 17 வருடங்கள் எடுத்துக் கொண்ட பல்சர் அடுத்த 1 கோடி இலக்கை வெறும் 6 ஆண்டுகளில் எட்டியுள்ளது.

பல்சர் சிறப்பு விலை தள்ளுபடி விபரம்

பல்சர் 125 கிளாசிக் மற்றும் பல்சர் 150, பல்சர் என்150 போன்றவை குறைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1000 வரை பல்சர் N160 ட்வீன் டிஸ்க் மாடல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Model எக்ஸ்-ஷோரூம் விலை விலை குறைப்பு
Pulsar 125 Neon ரூ. 84,493 ரூ.1,184
Pulsar 125 Carbon Fibre ரூ.91,610 ரூ.2,000
Pulsar 150 Single Disc ரூ. 1,12,838 ரூ.3,000
Pulsar 150 Twin Disc ரூ.1,19,923 ரூ.3,000
Pulsar N160 USD ரூ.1,36,992 ரூ.5,811

All prices ex-showroom, Delhi

மிக முக்கிய விலை குறைப்பு பல்சர் 220F மாடலுக்கு ரூ.7,379 வரையில் தள்ளுபடி சலுகையை மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மூன்று மாநில வாடிக்கையாளர்களுக்கு மட்ட்டும் பொருந்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் 150சிசி மற்றும் 180சிசி என இரு பிரிவில் கிடைத்து வந்த நிலையில், தற்பொழுது 125சிசி முதல் 400சிசி வரையில் 12 வகையில் பைக் ரசிகர்களின் உள்ளத்தை தொடர்ந்து கவர்ந்து வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.