18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 01) 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில், முதலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். ஆனால் நினைத்தபடி நல்ல தொடக்கம் லக்னோ அணிக்கு அமையவில்லை. கடந்த இரண்டு போட்டியில் ரன்களை குவித்த மிட்செல் மார்ஷ் இப்போட்டியில் டக் அவுட் ஆனார்.
மேலும் படிங்க: பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?
அவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 28 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பண்டும் பொறுப்பின்றி ஆடி ஆட்டமிழந்தார். அந்த அணிக்கு ஓரளவு ரன் வந்த காரணமே நிகோலஸ் பூரான் மற்றும் ஆயூஷ் பதோனியும்தான். இவர்களது பார்ட்னர்ஷிப் 54 ரன்கள். தொடக்கத்தில் அணியின் நிலைமை புரிந்து மெதுவாக தொடங்கி போகபோக வேகத்தை கூட்டிய நிலையில், 44 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆயுஸ் பதோனி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பாக அர்ஷதீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ், இந்த இலக்கை ஓவர்களில் கடந்து ஈசியாக வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களை குவித்தார். பஞ்சாப் அணி இரண்டு போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இடத்தில் உள்ளது.
மேலும் படிங்க: கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?