பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பெரிய தொகை கொடுத்து வாங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் அணி நிர்வாகம் வழங்கியதால், ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் மோசமான ஷாட்களை ஆடி பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் ரிஷப் பண்ட். 

18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோப்பைகளை வென்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் கீழேயும், இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் புள்ளிப்பட்டியலின் மேலேயும் உள்ளன. தொடரின் ஆரம்பத்திலேயே லக்னோ அணியை கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், ஓட்டுமொத்தமாக அந்த அணி சிறப்பாக விளையாடி அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அணியில் மற்ற வீரர்கள் நல்ல பங்களிப்பை அளிக்க மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்ட பண்ட் கடுமையாக சொதப்பி வருகிறார். 

கடும் சொதப்பல் 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அதில் களம் இறங்கிய பண்ட் டக் அவுட் ஆனார். விக்கெட்டை பாதுகாத்து அணிக்கு ரன்கள் சேர்க்க வேண்டிய நேரத்தில் தேவையில்லாமல் குல்தீப் யாதவ் பந்தை லாங் ஆஃப்பில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். 

மேலும் படிங்க: கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?

 

இதையடுத்து, இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய ரிஷப் பண்ட், 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஷர்ஷல் பட்டேல் வீசிய டாஸ் பந்தை சரியாக விளையாடாமல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி வந்தனர். டி20 போட்டிகளுக்கு இவர் சரிபட்டு வரமாட்டார் என்றும், அவரை இந்திய டி20 அணியில் வைத்து சிறுது காலம் அணியின் ஓர் இடத்தை வீணடித்து விட்டார்கள், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பை வழங்கி இருக்கலாம் என்றும் கடுமையாக சாடி வந்தனர். 

பொறுப்பற்ற பண்ட்

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கமே விக்கெட்கள் சரிந்தன. மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 32 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இங்கு நல்ல பார்ட்னர்ஷிப் வேண்டும். மறுபக்கம் நிகோலஸ் பூரான் அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு தனது விக்கெட்டை பாதுகாத்து மெதுவாக ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்தார். 

ஆனால் ரிஷப் பண்ட் இம்முறையும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அவர் பொறுப்பற்று, மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் வீசிய பந்தை அவர் நினைத்திருந்தால் லேக் சைடில் தூக்கி அடித்திருக்கலாம். பவர் பிளே என்பதால், 30 யார்டு சர்கிலை தாண்டிருந்தாலே ஃபோர் சென்றிருக்கும். ஆனால் ஷார் ஃபன் லேக்கில் மெதுவாக அடித்து சஹாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முக்கியமான தருனங்களில் விக்கெட்களை காத்து ரன்களை சேர்க்க வேண்டும். ஆனால், ரிஷப் பண்ட் துளியும் பொறுப்பின்றி மோசமான ஷாட்கள் ஆடி ஆட்டமிழப்பது சரியல்ல. 

27 கோடி கோவிந்தாவா? 

மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் வெறும் 17 ரன்களே அடித்திருக்கிறார். இந்த ஐபிஎல்லின் ஒரு மோசமான தொடக்கம் இதுவாகும். இந்த நிலையில், அவரது பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். இப்படி மோசமாக விளையாடவா ரூ. 27 கோடி கொடுத்து கேப்டன் பதவியையும் கொடுத்தது என ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். 

மேலும் படிங்க: இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? பரவும் தகவல்கள்! உண்மை என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.