இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ரோகித் சர்மாவின் மீது இருந்த நம்பிக்கை தற்போது போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவரின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாகவும், ரசிகர்களின் நம்பிக்கையை அவர் ஏமாற்றி வருவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார். அவரின் சமீபத்திய ஃபார்ம் விவாதங்களை எழுப்புகிறது என்று சேவாக் மற்றும் மனோஜ் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை எழுப்பி உள்ளனர்.
ரோஹித் சர்மா பார்ம்
கடந்த சீசன் முதலே ரோகித் சர்மாவின் பேட்டிங் மீது பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதுவரை ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்துள்ள ரோகித் சர்மா கேப்டன்ஷியில் சிறப்பாக இருந்த போதிலும், பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா அதன் பிறகு ரன்கள் அடிக்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 8 ரன்களுக்கும் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.
மேலும் படிங்க: MI vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த அறிமுக வீரர்.. யார் இந்த அஷ்வானி குமார்?
இதேபோல கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் பெரிதாக ரோகித் சர்மா ரன்கள் அடிக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு முறை சதை மட்டும் அடித்தார். ஆனால் அந்த போட்டியிலும் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. தனது பேட்டிங்கின் மூலம் அணிக்கு பக்க பலமாக ரோகித் சர்மா இருப்பதில்லை. மும்பை அணியின் முக்கியமான வீரராக கருதப்படும் ரோஹித் சர்மாவே இவ்வாறு சொதப்புவது அணியின் தோல்விக்கும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
ரோகித் சர்மா மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக் மற்றும் திவாரி ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். ரோகித் சர்மா பற்றி திவாரி பேசும் போது, அவரிடம் நிறைய திறமை உள்ளது. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனால் ஐபிஎல்லில் இதுவரை 18 சீசன்களில் ஒருமுறை கூட 600, 700 ரகளை அடித்ததில்லை. ஆனால் மறுபுறம் விராட் கோலி பலமுறை இந்த ரன்களை அடித்துள்ளார். நான் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை ஆனால் இதுதான் உண்மை. தற்போது ரோகித் சர்மா ரன்கள் அடித்தே ஆக வேண்டும், அவரால் எளிதாக ஒரு சீசனில் 400 ரன்களை அடிக்க முடியும். ஆனால் அது அணியின் வெற்றிக்கு உதவாது. ஒரு முறை கூட அவர் 800 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை, ஆனால் அவரிடம் இந்த கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. விராட் கோலி ரன்கள் அடிக்க வில்லை என்றால் மட்டும் கேள்விகள் வருகிறது, ரோகித் சர்மாவும் இதேபோல ரன்கள் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதே போல விரேந்திர சேவாக்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து பேசி உள்ளார். இன்னும் இந்த சீசன் ஆரம்பித்து இரண்டு, மூன்று போட்டிகள் தான் முடிவடைந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆகியுள்ளார். இந்த சீசனில் ஆவது 600, 700 ரன்கள் அடிப்பாரா? ரோகித் சர்மா கடைசியாக இதனை செய்து நாம் பார்த்ததே இல்லை. இப்படி இருக்கையில் எப்படி அவர் மீது நம்பிக்கை வரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!