BBL தொடரில் விராட் கோலி…? ஓய்வு கன்பார்மா…? சிட்னி சிக்சர்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பு!

ஐபிஎல் தொடரை போல பல்வேறு கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது. இந்த பிரிமியர் லீக் மூலம் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணத்திற்கு ஐபிஎல்லை எடுத்துக்கொண்டால், இளம் வீரர்களுக்கு இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது. 

அதே சமயம் வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதால், அவர்களுக்கு மைதானம் பற்றிய புரிதல் மற்றும் மற்ற வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணி வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நாட்டில் உள்ள மைதானம் அங்குள்ள வீரர்கள் குறித்து இந்திய வீரர்கள் அறிந்துக்கொள்ள முடியவில்லை. இது இந்திய அணி வீரர்களுக்கு ஓர் பிண்ணடைவே. 

மேலும் படிங்க: IPL 2025: ஐபிஎல்லில் பணக்கார பயிற்சியாளர் யார் தெரியுமா?

இச்சூழலில் இந்திய அணி வீரர்களும் வெளிநாட்டிற்கு சென்று விளையாட வேண்டும். அது அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் உதவியாக இருக்கும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்திய கட்டுப்பாட்டு வாரியமோ இந்திய வீரர்கள் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. 

ஏப்ரல் ஃபூல்

இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பாஸ் லீக் தொடரில் விராட் கோலி சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவியை சிட்னி சிக்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், அடுத்த இரண்டு சீசன்களுக்கு விராட் கோலி சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி வைரலாகவே அடுத்த  சில மணி நேரங்களில் ஏப்ரல் ஃபூல்ஸ் என பதிவிட்டு. இது உண்மை இல்லை என தெரிவித்தது. 

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி என்பதால், சிட்னி சிக்சர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. விராட் கோலி போன்ற வீரரை வைத்து இப்படியான செய்தியை வெளியிட்டால் ரசிகர்கள் நம்பிவிடுவார்கள் என சிட்னி சிக்சர்ஸ் இந்த வேலையை செய்து உள்ளது.

மேலும் படிங்க: ரோகித் சர்மாவின் மீது வன்மத்தை கொட்டிய விரேந்தர் சேவாக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.