18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடரின் 15வது லீக் ஆட்டம் நாளை (ஏப்ரல் 03) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கும். ஏனென்றால் இரு அணிகளும் 3 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளன. அதுவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இப்போட்டியில் இறங்குவதால், போட்டியில் சுவாரஸ்யத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி கடைசி இடத்திலும் ஹைதராபாத் அணி 8வது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளின் பலம் மற்றும் பலவீணம்
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் டி காக் நல்ல ஃபார்மில் உள்ளார். மற்ற வீரர்கள் இன்னும் சரியான ஃபார்மிற்கு வரவில்லை. குறிப்பாக மிடில் ஆர்டரில் களம் இறங்கும் வெங்கடேஷ் ஐயர் இதுவ்ரை பெரிய ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. அவரது ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. பந்து வீச்சில் ஷர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி நரைன் உள்ளிட்டோர் உள்ளனர். இருப்பினும் மெயின் ஸ்பின்னரான வருண் இதுவரை சரியாக பந்து வீசவில்லை. எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலுமே சரி செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன. அதனை சரி செய்தால் அந்த அணி வெற்றி பெறும்.
மேலும் படிங்க: IPL 2025: ஆர்சிபியை துரத்தும் துரதிருஷ்டம்; குஜராத் அணிக்கு கம்பீர வெற்றி!
ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில், பேட்டிங்கில் டிரவிஸ் ஹெட்ம் அபிஷேக் சர்மா, க்ளசென் உள்ளிட்டோர் பலமாக இருக்கின்றனர். இருப்பினும் அந்த அணி கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி உள்ளது. அதுவே அவர்களது தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. அதனை சரி செய்தாலே அவர்கள் வெற்றியை பெற முடியும்.
நேரம், மைதானம் மற்றும் ஸ்டீரிமிங்
நேரம்: இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
மைதானம்: ஈடன் கார்டன் கொல்கத்தா
ஸ்டீரிமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார்
இரு அணிகளின் உத்தேச பிளேயிங் 11
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், குயின்டன் டி காக் (விகீ), அஜிங்க்யா ரஹானே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி(இம்பேக்ட் வீரர்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விகீ), அனிகேத் வர்மா(இம்பேக்ட் வீரர்), அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ராகுல் சாஹர்/ ஜீஷன் அன்சாரி, ஆடம் ஜம்பா
மேலும் படிங்க: சிஎஸ்கேவின் ‘மினி ரிஷப் பண்ட்’ – இவரை சேர்த்தால் வெற்றிகளை குவிக்கலாம்!