ஏர்டெல் நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. நாடு முழுவதும் அதன் பயனாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. பல மொபைல் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க, நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் ஏர்டெல் பயனர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் தொல்லை ஏதும் இல்லாமல் இருக்கலாம்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.
முன்னதாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் அனைத்து திட்டங்களிலும் டேட்டா மற்றும் இலவச அழைப்பு வசதிகளை வழங்கி வந்தன. ஆனால், இது டேட்டா தேவையில்லாத பயனர்களும் தேவையில்லாமல் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சிக்கலைச் சமாளிக்க, அழைப்பு வசதியை மட்டும் கொடுக்கும் திட்டங்களைத் தொடங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டது. மேலும் இரண்டு சிம் பயன்படுத்துபவர்களும், எண்ணை ஆக்டிவ் ஆக வைத்திருக்க இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம் ரூ 1849
TRAI வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இலட்சக்கணக்கான பயனர்களுக்கு வெறும் ரூ.1849 என்ற மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. நீங்கள் ஏர்டெல் சிம்மைப் பயன்படுத்தினால், அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
ரூ 1849 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்
ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், ஒரு வருடத்திற்கு அனைத்து உள்ளூர் மற்றும் STD நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற இலவச அழைப்பின் பலனைப் பெறுவீர்கள். டேட்டா இல்லாமல் அழைப்பு வசதி மட்டும் தேவைப்படும் பயனர்களுக்கு இது சரியான தேர்வு. இது தவிர, இந்தத் திட்டத்தில், பயனர்கள் 365 நாட்களுக்கு மொத்தம் 3600 இலவச எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். அதோடு பயனர்கள் மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24|7 சர்கிள் வசதியைப் பெறுகிறார்கள். இது தவிர, பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு காலர் டியூனை இலவசமாக அமைக்கலாம்.
டேட்டாவுடன் கூடிய ஏர்டெல்லின் சிறந்த திட்டம்
மேலே குறிப்பிட்டுள்ளது முற்றிலும் வாய்ஸ்- ஒன்லி ரீசார்ஜ் திட்டம், அதாவது இணைய தரவு இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர திட்டத்தில் சில நோக்கங்களுக்காக உங்களுக்கு டேட்டா தேவைப்பட்டால், ரூ.2249 ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் பரிசீலிக்கலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. இது தவிர, 30ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கிறது, இதிலிருந்து நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 2.5ஜிபியைப் பயன்படுத்தலாம்.