IPL Points Table Latest News : ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக தொடங்கி நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி ஆர்சிபி அணியின் கோட்டையாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி சரியாக துவங்கும். இந்த சூழலில் இப்போது இருக்கும் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்ன தெரியுமா?
ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியல்
ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இப்போதைய சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி முதல் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இதில் என்ன அதிசயம் என கேட்கிறீர்களா?. இந்த மூன்று அணிகளுமே ஐபிஎல் தொடங்கியது முதல் விளையாடி வருகின்றன. ஆனால் ஒருமுறைகூட ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றதில்லை.
ஐபிஎல் புள்ளிப் பட்டியல் அதிசயம்
18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இந்த ஐபிஎல் தொடரில் தான் இந்த மூன்று அணிகளும் ஒருசேர புள்ளிப் பட்டியலில் டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது, ஐபிஎல் கோப்பையை வெல்லாத இந்த மூன்று அணிகளும் இப்போதைய ஐபிஎல் தொடரில் முதல் மூன்று இடங்களில் இருப்பதே அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஒன்றிரண்டு முறை ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி அணிகள் முறையே டாப் 4 இடங்களில் இருந்தாலும், மூன்று அணிகளும் ஒரு சேர ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் டாப் 3 இடங்களில் அடுத்தடுத்து இருந்ததாக சரித்திரம் இல்லை. ஏதாவது ஒரு அணி வரிசையாக தோற்றுக் கொண்டிருக்கும். ஆனால் இந்த முறை இந்த அணிகள் அப்படி இல்லை.
சாம்பியன் பட்டத்துக்கான பயணம்
மூன்று அணிகளும் ஐபிஎல் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய இந்த மூன்று அணிகளும் இம்முறை புதிய கேப்டன்கள் தலைமையில் களம் கண்டு ஒவ்வொரு போட்டியிலும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இதுவும் அந்த அணிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த மூன்று அணிகளில் ஒன்று உறுதியாக ஐபிஎல் பிளே ஆஃப் செல்லும் என கணிக்கப்பட்டிருந்தாலும், 3 அணிகளுமே டாப் 4 இடங்களுக்குள் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் சில கிரிக்கெட் நிபுணர்கள் ஆச்சரியம் கலந்த வியப்போடு கூறியுள்ளனர். இதனால் ஐபிஎல் 2025 தொடர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது.
மேலும் படிங்க: கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?
மேலும் படிங்க: பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?