ரையாக்விக்,
வடக்கு அட்லாண்டிக்கில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. 4 லட்சம் பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரின் தெற்கே ரையாக்ஜென் தீபகற்பத்தில் அமைந்துள்ள எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாவா எரிமலை குழம்பு வெளியேறி அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :