சென்னை: கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், தற்போது மீண்டும் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுஉள்ளது. தென்காசி அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிராக வழக்கில் உடுமன் மொஹிதீன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், […]
