Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அணிகள் விளையாடும்போதும் நிச்சயம் ஒரு இளம் வீரராவது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள் எனலாம்.
IPL 2025: எக்கச்சக்க இளம் வீரர்கள்…
உதாரணத்திற்கு மும்பையில் அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர்; டெல்லியில் விப்ராஜ் நிகாம்; பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா; லக்னோ அணியில் திக்வேஷ் சிங், பிரின்ஸ் யாதவ்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அனிகேத் வர்மா என சொல்லிக்கொண்டே போகலாம்.
IPL 2025: சிஎஸ்கேவில் ஒளிந்திருக்கும் ‘கட்டித் தங்கம்’
ஆனால், சிஎஸ்கே அணியில் (Chennai Super Kings) அப்படியொரு வீரரே இல்லையே என சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். டாப் ஆர்டர் ஒருபுறம் இருக்க மிடில் ஆர்டர் கலையிழந்து காணப்படும் நிலையில், அங்கு சிக்ஸர்களை பறக்கவிடும் ஒரு இளம் வீரரை கூடவா சிஎஸ்கே எடுக்கவில்லை என பலரும் விமர்சனங்களை அள்ளிவீசி வருகின்றனர். ஆனால், சிஎஸ்கே அப்படி ஒரு வீரரை எடுத்திருக்கிறது. அவருக்கு தற்போது வரை வாய்ப்பளிக்க இயலவில்லை அவ்வளவுதான். அவர் யார், அவரின் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.
Chennai Super Kings: அவர் தான் வன்ஷ் பேடி!
சிஎஸ்கே எடுத்திருக்கும் அந்த வீரரின் பெயர் வன்ஷ் பேடி (Vansh Bedi). ஆம், தோனிக்கு மாற்று வீரர் என சொல்லப்பட்ட சிஎஸ்கேவின் ஒரே ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரே தான் அவர். சமீபத்தில், சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியின்போது தோனிக்கும், விராட் கோலிக்கும் இடையே நின்று எடுத்த போட்டோவின் மூலம் அதிக வைரலானாரே அவர்தான் வன்ஷ் பேடி.
View this post on Instagram
வன்ஷ் பேடியை சுமார் ரூ.55 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுத்தது. 22 வயதான டெல்லியைச் சேர்ந்தவரான இவர் சிஎஸ்கேவின் சிக்கலுக்கு உரிய இடமாக இருக்கும் நம்பர் 4 ஸ்பாட்டில் பக்காவாக பொருந்துவார் என பலராலும் கூறப்படுகிறது.
Chennai Super Kings: டெல்லியை கலக்கிய சுட்டி பையன்
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரே ஒரு போட்டிக்காக மட்டுமே விளையாடியிருந்தார். ஆனால், கடந்தாண்டு நடந்த முதல் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான புராணி டெல்லி 6 அணிக்காக வன்ஷ் பேடி விளையாடியிருந்தார். ரிஷப் பண்டை போலவே அச்சமின்றி, வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் சிதறடிக்கும் திறன் கொண்டவராம். அந்த தொடரில் வெறும் 9 போட்டிகளில் மட்டும் விளையாடி சிஎஸ்கேவின் கவனத்தையே ஈர்த்துவிட்டார் என்றால் பாருங்களேன்…!
Chennai Super Kings: வன்ஷ் பேடியின் புள்ளிவிவரங்கள்
அவர் 9 போட்டிகளில் 221 ரன்களை, 185 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். குறிப்பாக, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 174 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 193 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். லெக்-சைடில் இவர் அற்புதமான ஷாட்களையும் வைத்திருக்கிறாராம்.
Vansh bedi will do wonders if he gets chance pic.twitter.com/89owZv150G
— (@Dhoni_fied) April 1, 2025
Chennai Super Kings: வன்ஷ் பேடியின் மிரட்டல் இன்னிங்ஸ்கள்
டெல்லி பிரீமியர் லீக் தொடரில் முதல் போட்டியிலேயே 19 பந்துகளில் 47 ரன்களுடன் நாட்-அவுட்டாக இருந்து பலரையும் கவர்ந்திருக்கிறார். தொடர்ந்து வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 30 ரன்கள், ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேஸிங்கில் 41 பந்துகளில் 96 ரன்கள் என பல மிரட்டல் இன்னிங்ஸ்களை வன்ஷ் பேடி விளையாடியிருக்கிறார்.
Chennai Super Kings: மிடில் ஆர்டரை காப்பாற்றுவாரா வன்ஷ் பேடி?
தற்போது ருதுராஜ் – ரச்சின் ரவீந்திரா டாப் ஆர்டரில் விளையாடிவிட்டு ராகுல் திரிபாதி அல்லது விஜய் சங்கரை நம்பர் 3இல் வைத்துக்கொண்டு, நம்பர் 4இல் வன்ஷ் பேடியை களமிறக்கலாம். ஒருவேளை சிஎஸ்கே அணிக்கும் இவர் சிறப்பாக விளையாடிவிட்டால் தோல்வி பாதையில் இருந்து சிஎஸ்கே மீண்டுவிடும் எனலாம்.