Thomson இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்துள்ளது, இது QLED லினக்ஸ் (கூலிடா 3.0) OS ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஏர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மிக சிறப்பு என்னவென்றால், Thomson வெளியிட்டுள்ள உலகின் முதல் 24 இன்ச் ஸ்மார்ட் டிவி இதுவாகும். தாம்சனின் புதிய QLED ஸ்மார்ட் டிவிகள் 24-இன்ச், 32-இன்ச் மற்றும் 40-இன்ச் வகைகளில் வருகிறது. மேலும் இந்த மூன்று தொலைக்காட்சிகளும் மிகவும் மெல்லிய பெசல் இல்லாத வடிவமைப்பு டன் வருகின்றன. இந்நிலையில் இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
24-இன்ச் மாடல் 24W இன் சக்திவாய்ந்த ஒலி வெளியீட்டைப் பெறுகிறது, அதே நேரத்தில் 32-இன்ச் மற்றும் 40-இன்ச் மாடல்கள் 36W இன் ஆடியோ வெளியீட்டைக் கொண்டுள்ளன. இது தவிர, பல அற்புத அம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றன. இந்த அனைத்து டிவியிலும் வைஃபை மற்றும் மிராகாஸ்ட் ஆதரவுடன் வருகின்றன. இந்தப் ஸ்மார்ட் டிவியில் கோஆக்சியல் இணைப்பு, HDMI மற்றும் USB போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. A35*4 செயலியில் இயங்கும் இந்த தொலைக்காட்சிகள் 2.4GHz அதிர்வெண்ணில் இயங்குகின்றன. YouTube, JioHotstar, Prime Video, Sony Liv மற்றும் Zee5 போன்ற பயன்பாடுகள் இவற்றில் ஆதரிக்கப்படுகின்றன.
ஸ்மார்ட் டிவியின் விலைகள்:
• 24 இன்ச் (24AlphaQ001) – ₹6799
• 32 இன்ச் (32AlphaQ019) – ₹8999
• 40 இன்ச் (40AlphaQ060) – ₹12,999
Thomson இன் புதிய ஏர் கூலர்கள்:
கோடை வெயில் இருந்து தபிக்க தாம்சன் 5 புதிய ஏர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 40 லிட்டர் முதல் 95 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட மாடல்கள் அடங்கும். ரிமோட் கண்ட்ரோலுடன் இந்த கூலர்கள் வருகிறது.
ஏர் கூலர்களின் விலை நிலவரம்:
• 40 லிட்டர் (WM40) – ₹5699
• 55 லிட்டர் (WM55) – ₹6799
• 60 லிட்டர் (WM60S – ஸ்மார்ட் ஏர் கூலர்) – ₹7499
• 75 லிட்டர் (GD75) – ₹7499
• 95 லிட்டர் (GD95) – ₹8999
ஸ்மார்ட் ஏர் கூலரின் முக்கிய அம்சங்கள்:
• ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பம்
• மல்டிபல் ஸ்பீட் செட்டிங்ஸ்
• டைமர் ஃபங்க்ஷன்
• இன்வர்டர் கம்ப்யூட்டிபிலிட்டி
• 3D ஹனிகம்ப் கூலிங் மீடியா
• ஆட்டோ ஸ்விங் மற்றும் ஹைவி டியூட்டி பம்ப்