புதுச்சேரி:புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு முதல் முறையாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடத்த புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கோரினார். மேலும், முதல் முறையாக புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இம்மாநாடு தொடர்பாக விசாரித்தபோது, “மக்களவை சபாநாயகர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பினார். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தகவலை புதுச்சேரி அரசுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து புதுச்சேரியில் சபாநாயகர் மாநாடு நடத்துவது தொடர்பான தேதி விரைவில் இறுதியாகி அறிவிக்கப்படவுள்ளது. 3 மாதங்களுக்குள் நடக்கும்” என்றனர்.