கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் மிகப்பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2,700 என இதுவரை வெளியாகி உள்ள தரவுகள் கூறுகின்றன. இது மிகத் துயரமான சம்பவம் தான். ஆனால், துயர சம்பவங்களிலும் சில ஆச்சரியங்கள் நடக்கத் தான் செய்கின்றன.
அதில் ஒன்றாக, மியான்மர் நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்கு கீழ் சிக்கி இருந்த நபர் ஒருவர் ஐந்து நாள்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

26 வயதாகும் அந்த நபரின் பெயர் நைங் லின் துன். மியான்மரின் தலைநகரான நைப்பிடோவில் உள்ள ஒரு அடுக்குமாடி ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அந்த ஹோட்டல் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் மீட்புபணி வீரர்கள், இந்த ஹோட்டல் இடிபாடுகளில் சிக்கி இறந்த உடல்களை மீட்டிருந்திருக்கின்றனர்.
அப்போது பின் பாயின்ட் கேமரா மூலம் நைங் உயிரோடு இடிபாடுகளில் இருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர், இவரை மியான்மர் மற்றும் துருக்கி மீட்பு குழுவினர் இணைந்து மீட்டுள்ளனர். இவர் தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
