Rohit Sharma ; மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர் மொத்தம் 21 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி 10 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் அவர் தேவையில்லாத சுமையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்து வருகிறார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கடந்த வருடமே ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் கேப்டன் பொறுப்பை மட்டும் ரோகித் சர்மாவிடம் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுத்து வருகிறது.
ஆனால் இந்த வாய்ப்புகளை ரோகித் சர்மா வீணடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு எத்தனை முறை கொடுக்கப்படும் என தெரியவில்லை. பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பிக் கொண்டிருப்பதால் முதல் 7 ஆட்டங்களுக்குப் பிறகு ரோகித் சர்மாவின் பேட்டிங் இடம் குறித்து மும்பை இந்தியன்ஸ் பரிசீலனை செய்யும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் முதல் பாதி ஐபிஎல் முடிந்தவுடன் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து ஆலோசனை செய்ய அந்த அணி திட்டமிட்டுள்ளது. ஓரளவுக்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கூட அணியில் இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்வார். ஒருவேளை சொதப்பினால் நிச்சயம் அணியில் இருந்து நீக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பில் நியமித்ததால் அந்த அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார் ரோகித் சர்மா. நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை அணியில் இருந்து வெளியேறவும் அவர் தயாராகவே இருந்தார். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி நேரடியாக ரோகித் சர்மாவிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அவரை அணியில் இருக்க வைத்தார். அதற்கேற்றார்போல் ரோகித் சர்மாவின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இதனால், இனியும் அவரை அணியில் தக்க வைப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்ற நிலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வந்துவிட்டது.
ஒருவேளை ரோகித் சர்மா பேட்டிங் சொதப்பல் தொடர்ந்து அவர் நடப்பு ஐபிஎல் தொடரிலேயே அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். இந்திய அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை அறிந்து வைத்திருக்கும் ரோகித் சர்மா அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?
மேலும் படிங்க: பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?