சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், ”இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும், வக்பு சட்டம், 1995ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லீம் சமூகத்தின் […]
