வாயை கொடுத்து வாங்கி கட்டிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ!

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது, ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயரை 26.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. 

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கழற்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட் தனது அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என நம்பி லக்னோ அணியின் நிர்வாகம் வாங்கியது. ஆனால் ரிஷப் பண்ட் அதற்கு மாறாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பேட்டிங்கில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. முதல் போட்டியில் டக் அவுட், 2வது போட்டியில் 15 ரன்கள், மூன்றாவது போட்டியில் 2 ரன்கள் என இதுவரை மொத்தம் 17 ரன்களே அடித்துள்ளார். சரி கேப்டனாகவாவது லக்னோ அணிக்கு வெற்றியை பெற்று கொடுப்பார் என பார்த்தால், அதிலும் கோட்டையை விட்டிருக்கிறார். மூன்று போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறார். 

மேலும் படிங்க: CSK vs DC: அடுத்த போட்டியில் அஷ்வின் இருப்பாரா? இல்லைனா அவருக்கு பதில் யார்?

 

ஆனால் மறுபுறமோ, ஷ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் 97 ரன்கள், 2வது போட்டியில் 52 ரன்கள் என ரன்களை குவித்து வருகிறார். கேப்டனாகவும் பஞ்சாப் அணிக்கு இரண்டு போட்டியிலும் வெற்றியை பெற்று தந்திருக்கிறார். இச்சுழலில் ரிஷப் பண்டை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அவரை இந்திய டி20  அணியில் சிறிது காலம் வைத்து வீணத்துவிட்டார்கள் அவருக்கு பதிலாக சாம்சனுக்காவது வாய்ப்பை முன்பே வழங்கி இருக்கலாம் என கடுமையாக சாடி வருகின்றனர். 

இந்த நிலையில்தான், நேற்று (ஏப்ரல் 01) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் அவர் மெகா ஏலத்தின் போது பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியிடமும் பஞ்சாப் அணியிடமும்தான் அதிக பணம் இருந்தது. என்னை பஞ்சாப் அணி எடுத்துவிட கூடாது என மிகவும் டென்ஷனாக இருந்தேன். நல்ல நேரம் எனக்கும், என்னை லக்னோ அணி எடுத்துவிட்டது என ரிஷப் பண்ட் கூறியிருந்தார். 

பொதுவாக பஞ்சாப் அணி என்றால் சற்று மொக்கையான அணி என்ற எண்ணம் பலரிடமும் உள்ளன. அந்த அணி நிர்வாகம் சரி இல்லை என்ற கருத்தும் பலரிடம் இருந்தது. இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் பஞ்சாப் அணி என்னை எடுத்துவிடுமோ என பயந்தேன் என கூறியிருந்தார். நேற்று (ஏப்ரல் 01) பஞ்சாப் அணியிடம் ரிஷப் பண்ட தலைமையிலான லக்னோ அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிங்க: ஐபிஎல் 2025 தொடரில்… இந்த 8 வீரர்களால் ஒரு போட்டியை கூட விளையாட முடியாது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.