கோடை காலத்தில், கொளுத்தும் வெயிலில், ஏசி அதிகம் பயன்படுத்துவது சகஜம் தான். ஆனால் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் வரும் மின்கட்டணத்தை நினைத்தாலும் மனதில் டென்ஷன் உண்டாவதையும் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் சில சிறப்பு டிப்ஸ்களை பின்பற்றினால், ஏசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் மின் கட்டணம் அதிகமாக ஆவதை தவிர்க்கலாம்.
ஏசியை அதிக நேரம் இயக்கினாலும் அதிக மின்கட்டணம் வராமல் இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை
சரியான அளவில் ஏசி செட்டிங்ஸ்
ஏசியின் சரியான வெப்பநிலை செட்டிங்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மின் நுகர்வு குறைக்க முடியும். பெரும்பாலான மக்கள் ஏசியை மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கின்றனர். குறைந்தபட்ச வெப்பநிலையான 18 டிகிரி என்ற அளவில் செட்டிங் அமைத்து ஏசியை (Air Conditioner) இயக்குவது அறையை வேகமாக குளிர்விக்கும் என்று நினைக்கின்றனர். இதனால் அதிக மின்சாரம் செலவாகும். முதலில் 30 மணி நேரம் குறைபட்ச வெப்பநிலையில் வைத்துவிட்டு, பின்னர் ஏசி வெப்பநிலையை 24-26 டிகிரிக்கு இடையில் வைக்க வேண்டும். இது அறையில் குளிர்ச்சியை பராமரிக்கிறது மற்றும் மின்சார நுகர்வு குறைக்கிறது.
மின்விசிறி பயன்படுத்தவும்
ஏசியை இயக்கும் போது, சிலர் மின்விசிறையை பயன்படுத்துவதில்லை. ஆனால், அறையில் மின்விசிறியை இயக்கினால் அது குளிர்ச்சியை அதிகரித்து ஏசிக்குஅதிக அழுத்தம் இல்லாமல் இருக்கும். அறையும் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். இதன் காரணமாக, அறையின் வெப்பநிலை இயல்பு நிலையில் இருக்கும். இதனால் ஏசியில் சுமையும் குறைகிறது.
ஏசி ஃபில்டர்களை சரியான நேரத்தில் சுத்தம் செய்யவும்
ஏசியின் வடிகட்டியில் தூசி படிவதால், அதன் காற்றோட்டம் குறைகிறது. இதனால் ஏசியில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மின் நுகர்வு அதிகரிக்கிறது. எனவே, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை ஏசி ஃபில்டரை நன்கு சுத்தம் செய்யவும் அல்லது மாற்றவும். இதன் காரணமாக, ஏசி செயல்திறன் சிறப்பாக இருக்கும். மின் கட்டணமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சரியான நேரத்தில் ஏசியை அணைக்கவும்
ஏசியை தேவையில்லாமல் ஓட விடாதீர்கள். நீங்கள் அறையில் இல்லை என்றால், ஏசியை அணைக்க வேண்டும். அதோடு, அறையின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும்போது, ஏசியின் வெப்பநிலையை அதிகரிக்கவும். இரவில் நீங்கள் விரும்பினால், ஏசியின் டைமர் அமைப்பைப் பயன்படுத்தவும், இதனால் சிறிது நேரம் கழித்து ஏசி தானாகவே அணைக்கப்படும். இதனால், மின் நுகர்வு கட்டுக்குள் உள்ளது.
ஏசி உள்ள அறையின் காற்றோட்டத்தில் கவனம் செலுத்துங்கள்
ஏசியில் இருந்து வரும் காற்றோட்டம் சரியான திசையில் இருக்க வேண்டும். ஜன்னல்கள் அல்லது கதவுகள் திறந்திருந்தால் சூடான காற்று உள்ளே வரலாம். இதனால் ஏசியை குளிர்விக்க நேரம் எடுக்கும். அறையின் ஜன்னல், கதவுகளை மூடி வைக்கவும்.
ஏசியைப் பயன்படுத்தும் போது மேலே குறிப்பிட்ட விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், உங்கள் மின்சாரக் கட்டணம் குறைவாகவும் பராமரிக்கக்கூடியதாகவும் இருக்கும். இதனால் மின் கட்டணம் உயரும் வாய்ப்புகள் குறைவு.