கர்நாடகாவில்  பைக் டாக்ஸி சேவைக்கு உயர் நீதிமன்றம் தடை

பெங்களூரு: ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனி​யார் பைக் டாக்ஸி நிறு​வனங்​களின் கூட்​டமைப்பு, கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனு​ம​திக்கக்கோரி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்தது.

இந்த மனுவை நேற்று நீதிபதி ஷியாம் பிர​சாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதி​முறை​களை உரு​வாக்​கு​மாறு கர்​நாடக அரசுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதற்​காக 3 மாதங்​கள் கால‌ அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்​களுக்கு கர்​நாட​கா​வில் நிறுத்த வேண்​டும். அதற்​குள் அரசு சட்ட திருத்​தத்தை மேற்​கொள்ள வேண்​டும்​’’என உத்​தரவிட்​டார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.