விராட் கோலி பேட்டிங்… பந்துவீச வரும்போது எமோஷ்னல் ஆன முகமது சிராஜ் – வீடியோ வைரல்

Virat Kohli, Mohammad Siraj Video : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி பேட்டிங் ஆடும்போது பந்துவீச வந்த முகமது சிராஜ், திடீரென எமோஷ்னல் ஆகி, பந்துவீசாமல் விலகிச் சென்றார். இப்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. முகமது சிராஜ் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை பெற்றது. முகமது சிராஜ் ஏன் எமோஷ்னல் ஆனார்? இருவருக்கும் இடையில் அப்படி என்ன பந்தம் என முழுமையாக பார்க்கலாம்.

ஆர்சிபி – குஜராத் டைட்டன்ஸ் மோதல்

ஐபிஎல் 2025 தொடரின் 14வது லீக் போட்டியில் ஆர்சிபி – ஜிடி அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 169 ரன்கள் மட்டுமே எடுக்க, இரண்டாவது பேட்டிங் ஆடிய ஜிடி அணி 17.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் மிடில் ஆர்டரில் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் சிறப்பாக ஆடியதால் ஓரளவுக்கு சவாலான ஸ்கோரை எடுக்க முடிந்தது.

குஜராத் அணி அபார வெற்றி

பின்னர் சேஸிங் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் இரண்டு ஓவர்கள் மீதம் வைத்து அந்த அணி வெற்றி பெற்றது. பட்லர் 39 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

முகமது சிராஜ் எமோஷ்னல்

pril 3, 2025

போட்டி தொடங்கும்போது குஜராத் டாஸ் வெற்றி பெற்றதால், அந்த அணி பவுலிங் எடுத்தது. இதனால், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி ஸ்டிரைக்கில் பேட்டிங் நிற்க, எதிர்முனையில் குஜராத் பிளேயராக முகமது சிராஜ் பந்துவீச வந்தார். அப்போது சிராஜ் திடீரென எமோஷ்னல் ஆகி பந்துவீச ஓடி வந்த அவர் திடீரென நின்று கொண்டார். விராட் கோலியும் அப்போது கொஞ்சம் எமோஷ்னல் ஆனார். காரணம், இந்த சீசனுக்கு முன்பு வரை முகமது சிராஜ் ஆர்சிபி அணியின் பிளேயராக இருந்தார். சுமார் 7 ஆண்டுகளாக விராட் கோலியுடன் இணைந்து விளையாடினார். இந்த சீசனில் ஆர்சிபி அணி அவரை விடுவித்தால் குஜராத் அணிக்கு சென்றார். அதனால், இப்போட்டியில் சூப்பராக பந்துவீசி குஜராத் அணியின் வெற்றிக்கும் வித்திட்டார் முகமது சிராஜ். விராட் – சிராஜ் எமோஷ்னல் வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிங்க: IPL 2025: ஆர்சிபியை துரத்தும் துரதிருஷ்டம்; குஜராத் அணிக்கு கம்பீர வெற்றி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.