20 ஆண்டுகளில் 60 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்த டிவிஎஸ் மோட்டார் | Automobile Tamilan

கடந்த 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி 150 துவங்கி தற்பொழுது அப்பாச்சி RTR 160 முதல் அப்பாச்சி RTR 310 வரை தற்பொழுது 4 மாடல்களாக 60க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


43 வருட ரேசிங் பாரம்பரியத்தின் உந்துதலில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றதாக அமைந்து, முதன்முறையாக பல்வேறு நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் டிவிஎஸ் முன்னோடியாக உள்ளது.

  • 2005 ஆம் ஆண்டு டிவிஎஸ் அப்பாச்சி அறிமுகப்படுத்தப்பட்டதை, அப்பாச்சி 150 அதன் முதல் மாடலாக வெளியானது.
  •  இந்தியாவில் பெர்ஃபாமென்ஸ் சார்ந்த மோட்டார் சைக்கிள்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டது.
  • டிவிஎஸ் அப்பாச்சி மாடல் முதன்முறையாக இந்திய சந்தையில் தொழிற்சாலை தனிப்பயனாக்கும் (Build-To-Order) BTO அம்சத்தை கொண்டு வந்தது.

60 லட்சத்துக்கும் கூடுதலான பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பாச்சி பிராண்டின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பமுடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என இந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் வணிகத் தலைவர் திரு. விமல் சம்ப்லி கூறுகையில்,

“டிவிஎஸ் அப்பாச்சி பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணியில் உள்ளது, ரேசிங் அனுபவத்த்தை வழங்குவதுடன் மற்றும் புதுமைகளை கொண்ட பிராண்டாக விளங்குகின்றது. கடந்த 20 ஆண்டுகளில், அப்பாச்சி செயல்திறன் மோட்டார் சைக்கிள் பிரிவில் ரைடிங் அனுபவத்தை மறுவரையறை செய்துள்ளது.

60 லட்சம் வாடிக்கையாளர் மைல்கல்லைக் கடந்துள்ள நிலையில், பிராண்டின் இடைவிடாத சிறப்பைப் பின்தொடர்வதற்கும், பிரிவில் முதன்மையான புதுமைகளுக்கு முன்னோடியாக இருப்பதற்கும், இணையற்ற நுகர்வோர் அனுபவங்களை வழங்குவதற்கும் ஒரு சான்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, அப்பாச்சி ஆர்ஆர் 310, மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 310 போன்ற மாடல்கள் சந்தையில் உள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.