58.31 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா | Automobile Tamilan

ஹோண்டா மோட்டார்சைக்கிள் (HMSI) நிறுவனத்தின் ஒட்டுமொத்த 2024-2025 ஆம் நிதியாண்டில் 58.31 லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை விட 19 % வரை கூடுதலான வளர்ச்சி அடைந்துள்ளது.


மாதாந்திர மார்ச் 2025ல் இந்நிறுவனம் 4,27,448 யூனிட்களை விற்ற நிலையில் உள்நாட்டு விற்பனையில் 4,01,411 யூனிட்களும் ஏற்றுமதியில் 26,037 யூனிட்களும் உள்ளது.

ஹோண்டா நிறுவனம் தனது முதல் ஆக்டிவா இ ஸ்கூட்டர் மற்றும் QC1 மாடலை விற்பனைக்கு வெளியிட்டு குறிப்பிட்ட சில நகரங்களில் டெலிவரியும் துவங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் 125சிசி மோட்டார்சைக்கிள்களில் ‘ஷைன் & SP125’ கிழக்கு இந்தியாவில் 30 லட்சம் வாடிக்கையாளர்களையும், மத்தியப் பிரதேசத்தில் 10 லட்சம் வாடிக்கையாளர்களையும் தாண்டியது. தென்னிந்தியாவில் ஹோண்டா விற்பனையும் 2 கோடியைத் தாண்டியுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.